ஞாயிறு, 4 நவம்பர், 2012

பீட்சா - திரைப்பட அனுபவம்


சேர்ந்து வாழ்ந்தாலும் சராசரி கணவனுக்குரிய எதிர்பார்ப்புகளுடன் (அதெல்லாம் ஒரு காலம்... ம்ஹூம்...) துணைவியை துணியை துவைத்துப்போடும், சமைத்துபோடும், அணைத்துபோகும் ஒருத்தியாகவே பார்க்கும் ஒருவன். சிறு பீட்சா கடையில் வேலை பார்க்கிறான். பிரபல எழுத்தாளராகத்துடிக்கும் துணைவி. எதிர்பாராத விதமாக குழந்தை உருவாக (!!), வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று குழப்பத்தில் இருப்பவருக்கு நடக்கும் சில அமானுஷ்ய அனுபவங்கள் (!!) அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று சிறு குழப்பம் கூட இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். 

வாழ்த்துகள் கார்த்திக் சுப்புராஜ்!

இந்த படத்தை பார்த்துதான் அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது!!

சனி, 3 நவம்பர், 2012

Flight


விமானி விப் விட்டேக்கர் திறமையான, மிகத்திறமையான விமான பைலட். குடிப்பழக்கமும் போதை பழக்கமும் உள்ளவர். அதனாலேயே 15 வயது மகனுடன் மனைவி விவாகரத்து செய்துவிட தனியே வாழ்கிறார். 

உடன் பணி புரியும் விமான பணிப்பெண் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டு, முன்னாள் மனைவியுடனான சிறு சண்டையில் குடித்துவிட்டு, போதை மருந்தும் உட்கொண்டுவிட்டு விமான பயணத்துக்கு தயாராகிறார். அன்று சரியான மழை. புதிய துணை பைலட். விமான டேக் ஆப் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. தனித்திறமையால் சமயோசித அறிவினாலும் அதை சமாளிக்கிறார்.



ஆனால் சிறிது நேரத்தில், விமானம் கட்டுப்பாடு இழக்கிறது. கடும் போராட்டத்துக்குப்பிறகு, புல்வெளியில் விமானத்தை தரையிறக்குகிறார். 6 பேர் உயிரிழக்கிறார்கள். 

மிகக்குறைந்த இழப்புடன் தரையிறக்கியதற்காக பாராட்டப்படும் அதே நேரத்தில், விமானம் ஓட்டும் நேரத்தில் போதையில் இருந்ததினால் சில பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. 
இடையில் போதைப்பழக்கம் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. 

எல்லா பிரச்சனைகளையும் சமாளித்தாரா, அவரது குடிப்பழக்கத்தால் என்ன பாதிப்பு என்று விருவிருப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

வழக்கம்போல் டென்சல் வாஷிங்டன்னின் அயராத நடிப்பு, விமான டேக் ஆப் மற்றும் தரையிறக்கும் காட்சிகள் நல்ல விருவிருப்பு. முதல் 30 நிமிடங்களுப்பிறகு பேச்சு பேச்சு ஒரே பேச்சு என்று போனாலும், டென்சலின் நடிப்பில் அதையெல்லாம் மறக்கடிக்கிறார். ஒவ்வொரு முறை குடிப்பழக்கதை விட நினைப்பதும், பின் சூழ்நிலையால் மீண்டும் குடியை நாடுவதுமாக அட்டகாசமாக, அநாயசமாக செய்திருக்கிறார் டென்சல்.

கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒரு படம்.




சனி, 20 அக்டோபர், 2012

மில்பிடாஸ் வாங்க்'ஸ் கிச்சன்

மில்பிடாஸில் புதிதாக வாங்க்'ஸ் கிச்சன் திறந்திருக்கிறார்கள். பே ஏரியாவில் எத்தனையோ ரெஸ்டாரெண்ட்ஸ் இருந்தாலும், சரியான இந்தியன்-சைனீஸ் கிடைகாதது ஒரு குறையாகவே இருந்தது. வாங்க்'ஸ் கிச்சனின் சிறப்பே அதுதான் என்றபோது ஒரு எதிர்பார்ப்பு நிறைவேறியதாகவே தோன்றியது.


சேசுவான் கிறிஸ்பி நூடுல்ஸ்

சிக்கன் பிரைட் ரைஸ்

ஸ்பைஸி பிரைட் சிக்கன்

சிக்கன் லாலி பாப்





பிரைட் பனானா ஐஸ்கிரீம்

புக்கட் பிஷ்

புக்கட் பிஷ் என்று ஒரு ஐட்டம். காரசாரமாக நன்றாகவே இருந்தது. சிக்கன் லாலி பாப் காரம் குறைவாக சின்ன பசங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்தது. மற்ற ஐட்டமெல்லாம் கொஞ்சம் காரம்தான். நாமும் இதைத்தானே எதிர்பார்த்தோம். ஆனால் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் முழு நிறைவா இல்லாதது மாதிரி இருந்தது. 

அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் எப்பயாவது ஒரு மாறுதலுக்காக போய் சாப்பிட்டு வரலாம்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

பே ஏரியாவில் இளையராஜா

வரும் நவம்பர் 11ம் தேதி 'மாஸ்ட்ரோ' இளையராஜாவின் இசைக்கச்சேரி சான் ஊசே வில் நடைபெற இருக்கிறது. டிக்கட் பதிவு செய்துவிட்டு ஆவலோடு காத்திருக்கிறேன் ராகதேவனை நேரில் பார்க்க. 


வழக்கம்போல 'ஜனனி' யுடன் துவக்குவாரா? சத்தம் போட்டீங்கன்னா நான் போயிடுவேன்னு செல்லமா மிரட்டுவாரா? 

இது தெலுங்கு அசோசியேசன் ஏற்பாடு செய்வதால் நிறைய தெலுங்கு பாடல்கள் பாடுவாரா?
சமீபத்தில் நந்தி விருது வாங்கியிருக்கார். அதுனால் தெலுங்குல பேசி அசத்துவாரா? பார்க்கலாம்.

update:

சமீபத்திய அறிவிப்பின்படி இளையராஜாவின் வருகை தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக இளையராஜாவே பேசியுள்ள வீடியோ:


வெள்ளி, 25 மே, 2012

மெமோரியல் வீக் எண்ட் - கலிஃபோர்னியா கேவர்ன்ஸ்

அமெரிக்காவில் மே 26,27,28 லாங் வீக் எண்ட் (திங்கள் கிழமை யும் லீவ் - அவ்வளவுதான்!). இருந்தாலும் இந்த மாதிரி லாங் வீக் எண்ட் வந்து ரொம்ப நாள் ஆச்சு. அதோட கொஞ்ச நாளா வேலையும் அதிகம். எங்கயாவது ஃப்ளை பண்ணலாம்னா, டிக்கட் வெலை எல்லாம் பல மடங்கு இருக்கு. சரி டிரைவிங் தான். ரொம்ப தூரம் டிரைவிங்கும் போர். லாஸ் ஏஞ்சலஸ் போய் யுனிவர்சல் ஸ்டுடியோ ல கூட்டத்தில நீச்சலடிக்கவும் பிடிக்கல. சரி ரொம்ப நாளா போகணும்னு நெனச்சு தள்ளிப்போட்டுகிட்டே இருந்த 'கலிஃபோர்னியா கேவர்ன்ஸ்' போகலாம்னு முடிவு பண்ணி கெளம்பியாச்சு. செளத் பே (சான் ஊசே) ல இருந்து அங்க போறதுக்கு எப்படியும் மூணு மணி நேரம் ஆகும். வெள்ளிக்கிழமை ராத்திரியே கெளம்பி பக்கத்துல போய் எங்கயாவது ஓட்டல்ல தங்கிட்டு காலைல 'கலிஃபோர்னியா கேவர்ன்ஸ்' போகலாம்னு முடிவு பண்ணியாச்சு. அங்க போயிட்டு அடுத்து பதிவு தொடரும்...

சனி, 5 மே, 2012

கிறிஸ்ஸி ஃபீல்ட்

Crissy Field, எனக்கு மிகவும் பிடித்த கடற்கரை. ஒரு பக்கம் கோல்டன் கேட் பிரிட்ஜூம், மற்றொரு பக்கம் அல்காட்ரசுமாக ரம்யமான இடம். சான் பிரான்சிஸ்கோ வில் கிழக்கு கடற்கரையில் உள்ளது. சில படங்கள் இங்கே.