சேர்ந்து வாழ்ந்தாலும் சராசரி கணவனுக்குரிய எதிர்பார்ப்புகளுடன் (அதெல்லாம் ஒரு காலம்... ம்ஹூம்...) துணைவியை துணியை துவைத்துப்போடும், சமைத்துபோடும், அணைத்துபோகும் ஒருத்தியாகவே பார்க்கும் ஒருவன். சிறு பீட்சா கடையில் வேலை பார்க்கிறான். பிரபல எழுத்தாளராகத்துடிக்கும் துணைவி. எதிர்பாராத விதமாக குழந்தை உருவாக (!!), வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று குழப்பத்தில் இருப்பவருக்கு நடக்கும் சில அமானுஷ்ய அனுபவங்கள் (!!) அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்று சிறு குழப்பம் கூட இல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.
வாழ்த்துகள் கார்த்திக் சுப்புராஜ்!
இந்த படத்தை பார்த்துதான் அனுபவிக்க வேண்டும், ஆராயக்கூடாது!!

எனக்கும் படம் ரொம்பவே பிடித்து இருந்தது...தமிழில் இது ஒரு வித்தியாசமான முயற்சி...
பதிலளிநீக்குவரவுக்கு நன்றி ராஜ்!
பதிலளிநீக்கு