ஒரு ஆண் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம், அதை விட ஒரு வீட்டில் ஒரு ஆண் சம்பாதிக்க முடியாத நிலையில் அந்த வீட்டுப் பெண் சம்பாரிப்பதால் எவ்வளவு பிரச்சினைகள் என்பதை பரமு என்ற நடுத்தர மனநிலை ஆணின் மனதின் வழியாக விவரிக்கிறது 'தாயுமானவன் '
பரமு ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலை யில் வேலை பார்க்கும் தொழிலாளி மற்றும் தொழிற்சங்கத் தலைவன் . தொழிலாளிகளின் பிரச்சினைகளை நிர்வாகத்தோடு பேசி சுமூகமாகத் தீர்ப்பதில் வல்லவன். இதனால் இரு தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கிய புத்திசாலி. அன்பான அனுசரணை யான மனைவி, பாசத்தைப்பொழியும் மகள் , மகன். அவர்களோடு தினந்தோறும் கழியும் மாலை வேளைகள், வார இறுதி என்று இருக்கும் ஒரு நடுத்தர குடும்பஸ்தன்.
நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு பிரச்சினை யை சரி செய்ய அவன் எடுக்கும் ஒரு முடிவால் ஏற்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனைத்தூக்கி கொண்டாடிய தொழிலாளர் களையும் நிர்வாகத்தையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரச்சினை க்கு தானே வலிய பொறுப்பேற்று வேலையை விட்டு விடுகிறான்.
அதிலிருந்து ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து அவனுக்கு பம்பாயில் வேலை கிடைத்து போகும் வரை பரமனின் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். பக்கத்து வீட்டு பாலியல் பிரச்சனைகள், மகள் பருவம் எய்தியிருக்கும் சூழ்நிலையில் அனைவரும் பெண்ணின் தாயை மட்டுமே தேடுவதிலிருந்து, பல்வேறு சூழ்நிலைகள் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது.
நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு நாவல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக