உலகில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குறைபாடு உள்ளவர்கள்தான். ஆட்டிசம் என்பது ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடு மட்டுமே, அவர்களும் நம்மைப்போல சாதாரண மனிதர்கள்தான் என்ற கருத்தை என்கவுண்டர் செண்டிமெண்ட் நகைச்சுவை குத்துப்பாட்டு என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
எவ்வளவு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இருந்தாலும் ஜனரஞ்சக முறையில் சொல்லப்படவில்லையென்றால் கவனிக்கப்படாமலே போய்விடக்கூடிய அபாயத்தை தவிர்த்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். முதலில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத்தூண்டியது. அந்த ஆர்வத்தை கடைசி வரை கெடுக்காமல் காப்பாற்றியது. இவையே படத்தின் வெற்றிக்கு காரணங்கள்.
கிஷோர் - அந்த போலீஸ் மிடுக்கும், பையனை புரிந்துகொள்ள முடியாமல் படும் அவஸ்தையும், பையனைக்காணவில்லையென்றதும் படும் வேதனையும் மிகச்சிறப்பு.
ஸ்நேகா - ஆசிரியையாக பாந்தமான நடிப்பு. பையன் - பெயர் தெரியவில்லை. உண்மையில் ஆட்டிசம் உள்ள இந்திய சிறுவர்களை வெகு குறைவாகத்தான் பார்த்திருக்கிறேன். அப்படி பார்த்த வரையில் அவர்களது முகமே சற்று வித்தியாசமாக இருக்கும். அது இந்த பையனிடம் பார்க்க முடியவில்லை. மற்றபடி ஓகே. அஞ்சலி யில் ஷாமிலி க்கு ஆட்டிசமா? சந்தேகம்.
இசை - பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை காட்சிக்குத் தேவையான உணர்வுகளைக் கொடுக்கிறது.
இயக்கம் - எந்த இடத்திலும் தொய்வடையாத திரைக்கதையால் நல்ல பொழுதுபோக்காகவும் பரபரப்பாகவும் இருக்கிறது.
குடும்பத்தோடு ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக